Saturday, February 1, 2014

Stay positive

காலையில் கடிகாரம் முணுமுணுப்பில் தோன்றும் சிடுசிடுப்பு
மறையும் - இதமான காப்பியின் சூட்டில்

பேருந்தின் நெரிசலில் எழும் தவிப்பு
மறையும் - "பையை தாங்கம்மா" என்று நீட்டும் கையால்

தலைசுற்ற ஓடும் அலுவலக வேலை களைப்பு
மறையும் - எப்போ மா வர என்னும் மகளின் குரலில்

நகரத்தின் துர்நாற்றம் தரும் எரிச்சல் -...
மறையும் - ஒரமாக பூ கட்டும் பாட்டியின் பூச்செண் டால்

அடித்து பிடித்து முடிக்கும் சமையலின் களைப்பு
மறையும் அருமை என்கிற ஒற்றை சொல்லால்

பிடித்தது கிடைக்கவில்லை என்றல் கிடைத்ததை ரசிக்க கற்றுகொள்
மறுநாள் ஒலிக்க போகும் கடிகார ஒலி இசையாய் தோன்றும்

No comments:

Post a Comment