இந்திரனக்கு கோபம் போலும்
இடியும் மின்னலும் என்னை மிரட்ட
வருடி கொடுத்தது ஒரு கரம்
இதமாய் அனைத்தது ஒரு கரம்
கேட்டது ஒரு குரல்
பட்டு திரைசீலையை நீக்கி பார்
இந்த இடியும் மின்னலும் உனக்கில்லை
எட்டி பார்த்தேன்
பக்கத்துக்கு வயலில்
குடிசை வாசலில்
கோமணத்துடன் மழையில் ஆடி களித்தான்
ஏழை விவசாயி -
இடியும் மின்னலும் மழையும் அவன் பயத்தை போக்கியதால்
No comments:
Post a Comment